தலைப்புகள்

தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்விக்கட்டணம்

 தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் பரிந்துரையை ஏற்று தனியார் சுயநிதி பள்ளிகளுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயித்தது. ஆனால், நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரை செய்த கட்டணம் தங்களுக்கு கட்டுப்படியாகாது என்றும் அதை திருத்தி அமைக்க வேண்டும் என்றும் ஏராளமான பள்ளிகள் மேல்முறையீடு செய்தன.
அவற்றின் மேல்முறையீட்டு மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு புதிய கல்விக்கட்டணம் நிர்ணயிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், நீதிபதி கோவிந்தராஜன், முதலமைச்சர் கருணாநிதியை நேற்று சந்தித்தார்.  புதிய கல்விக்கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சரிடம் எடுத்துரைத்தார்.  பின்னர்,  சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கமிட்டியின் அலுவலகத்தில் நீதிபதி கோவிந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

கொடூரக் கொலை

திருச்செந்தூர் அருகே கடற்கரையில் நரபலி கொடுக்கப்பட்டட குழந்தையின் தலை தோண்டி எடுக்கப்பட்டது.

மதுரை எஸ். ஆலங்குளத்தை சேர்ந்தவர் கவுஸ் பாஷா. இவர் 4 மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் பலியானார். இதனால் அவரது மனைவி சீரின் பாத்திமா தனது ஒன்றரை வயது மகன் காதர் யூசுப்புடன் மன நி்ம்மதிக்காக மதுரை, கோரிப்பாளைத்தில் உள்ள தர்காவில் தங்கினார்.


இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி நள்ளிரவில் குழந்தை காதர் யூசுப்பை யாரோ கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.

ஆக்டோபஸ் பாலுக்கு ஸ்பெயின் சிறப்பு குடியுரிமை!

கார்பாலினோ: தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெறும் என்று கணித்த ஜெர்மனியை சேர்ந்த பால் என்ற ஆக்டோபசுக்கு ஸ்பெயின் நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஆக்டோபஸ் இருக்கும் ஜெர்மனியில் உள்ள அருங்காட்சியகத்துக்கு சென்ற ஸ்பெயினின் ஓ கார்பலினோ நகர மேயர் கார்லோஸ் மான்டெல், ஆக்டோபசுக்கு நினைவுப் பரிசு மற்றும் ஸ்பெயின் நாட்டு குடியுரிமைக்கான பத்திரத்தை வழங்கினார்.

அண்டவெளியில் பூமியைப் போன்ற நூற்றுக்கணக்கான கிரகணங்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் வி்ண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாஸா அனுப்பியுள்ள கெப்லர் விண்கலம் 5 புதிய சூரிய குடும்பங்களையும் (Solar systems) 706 புதிய புதிய கிரகங்களையும் (Planets) கண்டுபிடித்துள்ளது. இதில் 140 கிரங்கள் பூமியைப் போன்றே உள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த புதிய சூரிய குடும்பங்களும், கிரகங்களும் நமது பூமி அமைந்துள்ள பால்வெளி மண்டலத்திலேயே (Milky Way Galaxy) அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டோ

        ஐக்கிய நாடுகளில் வீட்டோ அதிகாரம் (United Nations Security Council veto power) எனப்படுவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் சீனா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் தற்பொழுது ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து), ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் கொண்டுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும். 
             இரண்டாம் உலகப்போரின் வெற்றிக்கு இந்த 5 நாடுகளின் பங்கு வெளியுலகுக்கு தெரிய வந்ததால் ஐநா அமைக்கப்பட்ட 1946 ஆம் ஆண்டு முதல் வீட்டோ (தடுத்து நிறுத்தும்) அதிகாரம் பெற்ற நாடுகள் என்ற சிறப்பை இந்நாடுகள் பெறுகின்றன. இந்த அதிகாரத்தை ஐ நா பாதுகாப்பு சபையின் பச்சை அறிக்கை (The green papers of U N Security Council) தெளிவுபட அறிவித்துள்ளது. இதன் படி பாதுகாப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் (இதர உறுப்பு நாடுகள்) ஆதரவு பெற்றிருந்தாலும் இந்த 5 நாடுகளின் எவரேனும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தால் அந்த தீர்மானம் தோல்வியடையும் என்று ஐ நா சட்ட பிரிவு 27 ல் வரையறுத்துள்ளது.

மூன்றாவது உலகப் போர்?

           தற்போதைய சூழ்நிலையில் நாடுகளிடையே போர் மூண்டால் அது கட்டாயம்  அணு ஆயுதப் போராகத்தான் இருக்கக்கூடும்.

             இந்த பயம் நமக்கு மட்டுமல்ல உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. காரணம். வடகொரியா மற்றும் தென்கொரியாவிடையே நிலவிவரும். பதற்றமான சூழ்நிலை. ஆங்கிலேயரிடமிரு்ந்து விடுதலைபெற்ற பின்னர் இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் பிரிந்தது போல ஜப்பானிடமிருந்து  பிடுதலைபெற்ற கொரியா வடகொரியா என்றும் தென்கொரியா பிரிந்தது.  கம்யூனியசத்தை வடகொரியா மேற்கொண்டிருந்தாலும் அணுஆயுத எச்சரிக்கை தற்போது விடுத்துள்ளது.  இதற்குக் காரணம்