தற்போதைய சூழ்நிலையில் நாடுகளிடையே போர் மூண்டால் அது கட்டாயம் அணு ஆயுதப் போராகத்தான் இருக்கக்கூடும்.
இந்த பயம் நமக்கு மட்டுமல்ல உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. காரணம். வடகொரியா மற்றும் தென்கொரியாவிடையே நிலவிவரும். பதற்றமான சூழ்நிலை. ஆங்கிலேயரிடமிரு்ந்து விடுதலைபெற்ற பின்னர் இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் பிரிந்தது போல ஜப்பானிடமிருந்து பிடுதலைபெற்ற கொரியா வடகொரியா என்றும் தென்கொரியா பிரிந்தது. கம்யூனியசத்தை வடகொரியா மேற்கொண்டிருந்தாலும் அணுஆயுத எச்சரிக்கை தற்போது விடுத்துள்ளது. இதற்குக் காரணம்
தென்கொரியா நாட்டின் 46 வீரர்கள் இறந்ததே ஆகும். அவ்விறப்பிற்குக் காரணம் வடகொரியா தான் என்று தென்கொரியா திட்டவட்டமாக கூறுகிறது. வடகொரியா இந்த சம்பவத்திற்கு பொருப்பேற்க திட்டவட்டமாக மறுத்துவருகிறது. வட கொரியாவிற்கு சீனா பல ஆண்டுகளாகவே ஆதரவு அளித்து வருகிறது. 1968-ல் தென்கொரியா அதிபரை கொலை செய்ய காமாண்டோ வீரர்களை அனுப்பியுள்ளது வடகொரியா. ஆனால் அம்முயற்சி தோழ்வியில் முடிந்தது.
பல்வேறு முறைகேடான முயற்சிகளில் வடகொரியா ஈடுபட்டாலும் அதன் செயல்களை தட்டிக்கேட்க எந்த நாடும் முன்வரவில்லை. காரணம் வடகொரியாவிற்கு சீனா பக்கபலமாக இருந்துவருகிறது. தனக்கு வேண்டாத அமேரிக்கா போன்ற நாடுகளை மிரட்டிப்பார்க்க வடகொரியாவை சீனா பயன்படுத்திக்கொள்கிறது.
வடகொரியாவிற்கு எதிராக எந்த ஒரு தீர்மாணத்தையும் ஐ.நா சபையில் நிறைவேற்றவிடாமல் சீனா தடுத்துவிடுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் சீனா ஒரு நிரந்தர நாடு என்பதால் அதற்கு கிடைத்த வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தடுத்துவிடுகிறது.

சீனா ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராக இருப்பதால் எளிமையாக வடகொரியா தப்பித்து விடுகிறது. இந்நிலையில் தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை பார்த்ததே போர் போல இருந்ததே வடகொரியா இவ்வாறு எச்சரிக்கை விடுத்ததற்கான காரணமாக அமைந்துள்ளது. அந்த அளவிற்கு ஒத்திகையே உலுக்கியுள்ளது உலக நாடுகளை.

No comments:
Post a Comment